
posted 30th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
ஒரு தாய்க்கு எத்தனையாவது கர்ப்பம் என்று கணக்கிட்டு அவதானமாக இருக்க வேண்டும் என்றில்லை. ஒரு தாய்க்கு எல்லா கர்ப்பமும் முதலாவது கர்ப்பம் என்றுதான் கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவது கர்ப்பம் என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரண்டாவது, மூன்றாவது என்றால் பரவாயில்லை என்றில்லை. எனவே, எல்லா கர்ப்பத்திலும் ஒவ்வொரு தாயும் வெகு அவதானமாக கர்ப்ப காலத்தைக் களிக்க வேண்டும். குழந்தை பிறந்தபின்பும் கூட மிகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும்.
குழந்தையானது கர்ப்பத்தில் வளரும் போது தாய் நன்றாக, சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடுவதனால் சிசு நல்லாரோக்கியத்துடன் வளரும் அதே நேரம், தாயும் சுகதேகியாக இருந்து நல் பிரசவத்தினை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அதற்காக எல்லா விதமான சாப்பாடுகளையும் கர்ப்பிணித்தாய்கள் உண்ண முடியாது.
எனவே, கர்ப்பிணித்தாயானவர்கள் எவ்வகையான சாப்பாடுகளைச் சாப்பிட வேண்டும், எந்த வகையான சாப்பாடுகளைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்பதனை அறிந்து கொள்வது அவசியமாகின்றது. இவ்வாறு தவிர்க்க வேண்டியனவற்றைத் தவிர்ப்பதனால் தாயும், சிசுவும் அவ் உணவு வகையால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளிலிருந்தும், அதனால் வரப்போகும் நோய்களிலிருந்தும், இருவரையும் காப்பாற்றப்படலாம்.
எனவேதான் ஒரு சில வழிகாட்டகளை இங்கு குறிப்பிட வேண்டும் என்று நான் இதனை உங்களுக்குத் தருகின்றேன்.
பச்சையான அல்லது அரை குறையாக சமைக்கப்படும் இறைச்சி அல்லது மீன் உணவுகள்:
இவ்வாறான பச்சையாக உண்ணும் உணவுகளில் முக்கியமாக சுசி (sishi)யும், மச்சம் (steaks) என்பனவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். இவ்வாறான உணவுகளில் தீங்கு விளைவிக்கக்கூடிய பக்ரீயாக்களும் உதாரணமாக லிஸ் ரீறியா (Listeria), சல்மொனெல்லா (Salmonella), ஒட்டுண்ணிகளும் (உதாரணமாக, ரொக்ஸோபிளாஸ்மா (Toxoplama) பெருக்கமடைந்தும், வளர்ச்சியுறும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
இவ்வாறான தீங்கு விளைவிக்கும் நுண்கிருமிகளினால் ஏற்படும் கொடூர நோய்களினால் கருக் கலைதல் (miscarriage), சிசு இறந்து பிறத்தல் (stillbirth) அல்லது கடுமையான வருத்தங்கள் சிசுவுக்கு வர வாய்ப்புகள் உண்டு.
இதனைத் தவிர்ப்பதற்கு மாமிசமும், மச்சமும் நன்றாகச் சமைத்துச் சாப்பிட்டால் மட்டுமே இத் தீங்குகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
Pregnancy is a critical time for both the mother and the developing baby, and nutrition plays a pivotal role in ensuring the health and well-being of both. While it's essential for pregnant women to maintain a balanced diet rich in nutrients, there are certain foods that should be avoided to prevent potential health risks. Below is a comprehensive guide on foods that pregnant mothers should steer clear of during their pregnancy.
Raw or Undercooked Meat and Fish
Raw or undercooked meat and fish, including sushi and rare steaks, can harbour harmful bacteria and parasites such as Listeria, Salmonella, and Toxoplasma. These pathogens can cause severe infections that may lead to miscarriage, stillbirth, or serious health problems for the baby. Pregnant women should ensure that all meat and fish are cooked thoroughly to safe internal temperatures.
Unpasteurized Dairy Products
Unpasteurized milk and dairy products, including certain soft cheeses like Brie, Camembert, and blue-veined cheeses, can contain Listeria. This bacterium can cross the placenta and cause infections that may result in preterm labour, miscarriage, or life-threatening illnesses in new-born babies. Choose pasteurized products to reduce these risks.
Certain Seafood High in Mercury
Certain types of fish contain high levels of mercury, which can harm the developing nervous system of the foetus. Pregnant women should avoid high-mercury fish such as shark, swordfish, king mackerel, and tilefish. Instead, they should choose low-mercury options like salmon, sardines, and trout, which also provide beneficial omega-3 fatty acids.
Raw or Undercooked Eggs
Raw or undercooked eggs may be contaminated with Salmonella, which can cause food poisoning. This can lead to severe dehydration and other complications for the mother and potentially affect the baby. Avoid foods that commonly contain raw eggs, such as certain dressings, homemade mayonnaise, and raw cookie dough. Ensure eggs are cooked until both the yolk and white are firm.
Processed Meats
Processed meats like hot dogs, sausages, and deli meats can be sources of Listeria. If consumed, these should be heated until steaming hot to kill any potential bacteria. Additionally, these meats often contain high levels of nitrates and sodium, which should be consumed in moderation.

Image by วัฒนา ลอยมา from Pixabay
பதப்படுத்தப்படாத (Unpasteurized) பாலுணவுகள்:
இவ்வாறான பதப்படுத்தப்படாத பாலுணவு வகைகளுக்கு உதாரணமாக, சீஸ் (soft cheeses) - பிறீ (Brie), கமெம்பேர்ட் (Camembert) டுடன் பிளூ-வெயின்ட் சீஸ் (Blue-veined cheeses) என்பனவற்றை உண்பதனால் பிள்ளைப் பேறு நாட்களின் முன் பிள்ளைப் பேறு (Pre-term Labour), கருக்கலைதல் (Miscarriage or abortion) உருவாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இவ்வாறான மிகவும் பாரதூரமான விளைவுகள் உருவாகுவதற்கு இவ் வகையான உணவுகளில் உருவாகும் பக்றீரியாக்கள்தான் காரணமாகின்றன.
எனவே, இவற்றினைத் தவிர்ப்பதற்கு நன்கு சூடாக்கிய பாலினை அருந்துவதே சிறந்தது.
அதிகம் பாதரசம் கொண்டுள்ள கடலுணவுகள்
மீன் உணவு சாதாரணமாக சுகாதாரத்திற்கும், உடல்நலத்திற்கும் நல்லது என்று கூறானாலும், சுறா மீன் கர்ப்பிணித் தாய்மாருக்கு கூடாது. ஏனென்றால் இவ்வாறான மீனானது மிகவும் அதிக அளவில் பாதரசத்தைக் கொண்டுள்ளது. இந்த வகையான கனிமங்கள் சிசுவின் நரம்பு மண்டலத்தையே தாக்கும் தன்மை உள்ளதனால் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளவது அவசியமாகின்றது.
இவ்வாறான மீன்கள் தவிர்ந்த சமன் மீன் (salmon), சாடின் மீன் (sardines), ற்றவுட் மீன் (trout) ஆகியன உடலுக்கு சுகாதாரத்தினைத் தரும் ஒமேகா-3 கொழுப்பமிலத்தினைக் கொண்டுள்ளது முக்கியமானதொன்றாகும். எனவே, இவ்வாறான மீன்களை உண்பது கர்பிணித்தாய்மாருக்கு உகந்ததாகும்.
பச்சை அல்லது குறையாக அவித்த முட்டை
இவ்வாறாக பச்சை முட்டையையோ அல்லது குறையாக அவித்த முட்டையையோ சாப்பிடுவதனை கர்ப்பிணித் தாய்மார் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இவ்வாறான பதத்திலுள்ள முட்டையானது சல்மொனல்லா (salmonella) பக்றீரியாவினைக் கொண்டுள்ளதனால், இதனை உட்கொண்டால், இக்கிருமியினால், உற்பத்தியாக்கப்படும் நச்சுத்தன்மையானது (toxin) உடலில் பாதகமான விளைவுகளை உண்டாகும். இதனை,
Unwashed Fruits and Vegetables
Fruits and vegetables are crucial for a healthy diet, but they can be contaminated with harmful bacteria and parasites from the soil or handling. Always wash fruits and vegetables thoroughly under running water to remove any potential contaminants. Avoid pre-packaged salads or fruits that have not been washed properly.
Caffeine
High caffeine intake has been linked to an increased risk of miscarriage and low birth weight. It is generally recommended to limit caffeine consumption to less than 200 milligrams per day, which is roughly equivalent to one 12-ounce cup of coffee. Be mindful of caffeine content in other beverages and foods, such as tea, soda, and chocolate.
Alcohol
Alcohol consumption during pregnancy is strongly discouraged as it can lead to Fetal Alcohol Spectrum Disorders (FASDs), which encompass a range of physical, behavioral, and learning problems. There is no known safe amount of alcohol during pregnancy, so complete abstinence is the best approach.
Certain Herbal Teas and Supplements
Not all herbal teas and supplements are safe for pregnancy. Some herbs can stimulate the uterus or affect hormone levels, potentially leading to complications. It’s important to consult with a healthcare provider before consuming any herbal products during pregnancy.
Excessive Sugary and Junk Foods
While not immediately dangerous, excessive consumption of sugary and junk foods can contribute to excessive weight gain and gestational diabetes. These conditions can lead to complications such as preterm birth and preeclampsia. Aim for a balanced diet that includes whole grains, lean proteins, fruits, vegetables, and healthy fats.
உணவினால் ஏற்படும் நச்சுத் தன்மை (food poisoning) என்று கூறுவார்கள். இவ்வாறு தாய்க்கு இந் நோய் வந்தால் அதாவது அதனால் தாய்க்கு, வயிற்றோட்டம் (diarrhoea), வயிறு குமட்டல் (nausea), சத்தி (vomiting), அடிவயிற்று நோவு (lower abdominal pain), ஆகின உண்டாகி, அதனால் நீரிழப்பு (dehydration) அதிகமானால் அது சிசுவையும் பாதிக்கக்கூடும். எனவே, இவ்வாறான அசௌகரியத்தையும், ஆபத்தான நிலைமைகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமானால் இது சம்பந்தமான உணவுகளாவனவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்
இவ்வகை உணவுகளுக்கு உதாரணமாக, கொட் டோக் (hot dogs), டெலி இறைச்சி (deli meats), சொசேஜஸ் (sausages) கூறலாம். இவை லிஸ்றீரியா (Listeria) எனும் பக்றீரியாவைக் கொண்டுள்ளதனால், இவ்வாறான உணவினை உண்பதற்கு முன்பு நன்றாக சூடாக்க வேண்டும். அத்துடன் இவ்வாறான உணவுகள் அதிக அளவிலான நைறேட் (nitrate), சோடியம் (sodium), ஆகிய கனி உப்புக்களைக் கொண்டுள்ளதனால் இவற்றினையும் குறைவாக உண்ண வேண்டிய அவசியமாகின்றது.
நன்கு கழுவாத மரக்கறி அல்லது பழங்கள்
கடைகளில் விற்பனையாகும் மரக்கறிகளும், பழங்களும் இன்றை காலங்களில் பக்கற்களில் அடைக்கப்பட்டு விற்பனையாகின்றன. இவ் உணவுகள் மண்ணிலிருந்து எடுக்கப்படுவதனால் மண்ணிலுள்ள பக்றீரியாக்கள் இவற்றினை மாசுபடுத்தி இருக்க கூடுதலான வாய்ப்புகள் உண்டெனலாம். எனவே, அவ்வாறான பக்கற்றுக்களில் உள்ள உணவுகளை சாப்பிடு முன்பு நன்கு கழுவி உண்பது அவசியம். மேலும், அவ்வாறான உணவுகளை கடைகளில் வாங்கிய உடனே சாப்பிடுவதனைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.
கவெயின்(caffeine), சில மூலிக தேனீர்
அதிகமாகத் தேனீர், கோப்பி, சோடா, சொக்கலேட் என்பன கருவினைக் கலைத்துவிடும் தன்மை கொண்டதனால் அவற்றினை அறிவுறுத்தலுக்கமைய அதனுடைய அளவினில் பாவித்தால் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம். அத்துடன், ஒரு சில மூலிகை தேனீர்களை உட்கொள்ளவதிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
அல்க்கோல்
கர்ப்பிணிகள் அல்ககோலினை அருந்துவது கட்டாயமாகத் தவிர்கப்பட வேண்டியதொன்றாகும். அல்க்ககோலானது பலவிதமான உள, உடல் சம்பந்தமான கோளாறுகளைத் தோற்றுவிக்கும்.
அதிகளவான சீனி நிறைந்த உணவுகள்
இவ்வாறு அதிகமான சீனி உணவுகளோ அல்லது ஜங் (சாதாணமாக கூறவேண்டுமானால் கண்டவகையான சாப்பாடுகள் என்று சொல்லுவார்கள்) உணவுகளை உண்பதனால் உடல் பருமன் அதிகரிக்கும். இதனால் கர்ப்ப காலத்தில் உருவாகும் சலரோகம் (Gestational diabetes) உருவாக சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். இவ்வாறு உருவானால், காலத்திற்கு முன்பே அரைகுறைவான கர்ப்பத்திலுள்ள சிசு பிறப்பு (Pre-term birth), கூடிய இரத்த அழுத்தம் (Hypertension) போன்ற மிகவும் கடுமையான நோய்கள் உண்டாகும். இந்நோய்களை ஒட்டு மொத்தமாக பிறீ-எக்லம்சியா (Pre-eclampsia) என்று கூறப்படும். இன்னமும் கடுமையாக வரும் இந் நோயானது எக்லம்சியா (Eclampsia) என்று கூறப்படும். இந் நோய்களால் சிசுவுக்கும், தாய்க்கும் உயிராபத்துக்கள் கூட வரலாம்.
எனவே, மேலே குறிப்பிட்ட வழிமுறைகளையும், சுகாதாரமான உணவுகளையும் உண்பதனால் நம் வயிற்றினுள் வளரும், நம்மையே நம்பியிருக்கும் அந்த சிசு, நமது உயிர், நமது வாரிசினை சுகாதாரமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
வாழ்க வளமுடன் - Live prosperously